Monday, May 18, 2009

நான் யார்?



ஒருவர் உருவாக்கிய படைப்பு?
இருவர் மூலம் வந்த பிணைப்பு?

சில உறவுகளில் காணும் சிரிப்பு?
சில சமயங்களில் எழும் கொந்தளிப்பு?

பல வண்ணங்களின் பிரதிபளிப்பு?
பல எண்ணங்களின் தொகுப்பு?

அறிந்தும் அறியாமலும் நான்படும் துடிப்பு.
முதிர்வதற்கு முன்பே,
வாழ்க்கையில் ஒரு வித சலிப்பு.

ஏதற்காக இந்த மானிட பிறப்பு?


நான் யார்?
யார் நான்?

சுயநலம் - பொதுநலம்



சுயநலத்திற்காக, நீ பொதுநலத்துடன் வாழ்கிறாயா?

அல்லது

பொதுநலத்திற்காக, நீ சுயநலத்துடன் வாழ்கிறாயா?


Thursday, May 14, 2009

நான் நானாக....



கொஞ்சம் குறும்பு.
கொஞ்சம் குழந்தைத்தனம்.
கொஞ்சம் எழுத்து பிழை.

இங்கு அத்தனைக்கும் இடம் உண்டு.